காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு 7.35 TMC நீரை திறந்து விட வேண்டும் எனக் கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 46-வது கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அப்போது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு டிசம்பர் மாதம் வழங்க வேண்டிய 7.35 டி.எம்.சி நீரை கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும் எனக் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. நடப்பாண்டில் 158 TMC நீரை திறக்க வேண்டும் என்ற நிலையில், தொடர் மழையால் தமிழகத்துக்கு இதுவரை 315.76 TMC நீர் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
















