நீலகிரியின் பூர்வ குடிகளான, ஆறு பழங்குடியின மக்களின் மொழிகளில், திருக்குறளை மொழி பெயர்த்து வெளியிடும் பணியில் மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
தமிழின் தொன்மை நூலான திருக்குறளை மேலும், 30 மொழிகளில், மொழி பெயர்த்து வெளியிடும் பணி நடைபெற்று வருகிறது.
அதில், நீலகிரியின் பூர்வ பழங்குடிகளான, தோடர், கோத்தர், இருளர், குரும்பர், பணியர், காட்டு நாயக்கர் மொழிகளும் இடம் பெற்றுள்ளன.
கூடலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தமிழ் பேராசிரியர்கள் கரிகாலன், தண்ணரசி ஆகியோர், 6 பழங்குடி மக்களின் உதவியுடன் திருக்குறளை மொழி பெயர்த்து வருகின்றனர்.
















