ஆஸ்திரேலியாவில் கட்டுக்கடங்காமல் காட்டுத் தீப்பற்றி எரிந்து வருவதால் காற்றும் மாசு அதிகரித்துள்ளது.
நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் மொத்தம் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத் தீ எரிந்து வருகிறது.
இதனால் ஏராளமான வீடுகள் சேதமடைந்ததோடு மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாகப் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி தீயில் கருகியுள்ளது.
















