கடன் தொகையைச் செலுத்துவது குறித்து நாளைக்குள் பதிலளிக்க வேண்டுமெனத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திவாலானவர் என அறிவிக்கப்பட்ட அர்ஜூன்லால் சுந்தர்தாஸிடம் இருந்து ஸ்டூடியோ கிரீன் படத் தயாரிப்பு நிறுவனம் 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தது.
அந்தத் தொகை வட்டியுடன் சேர்த்து தற்போது 21 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உள்ளது.
இந்நிலையில் அந்த தொகையை செலுத்த ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும் என அர்ஜூன் லால் சுந்தர்தாஸ் சொத்துக்களை நிர்வாகிக்கும் சொத்தாட்சியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள, வா வாத்தியார் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கடன் தொகையைச் செலுத்துவது குறித்து நாளைக்குள் பதிலளிக்க வேண்டுமெனத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
















