கர்நாடக மாநிலம், சிவமொக்கா அருகே தெருநாயை இளைஞர்கள் அடித்துக் கொன்ற சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
சிவமொக்கா பகுதியில் பன்றிக்குட்டிகளை தெருநாய் கடித்து கொன்றதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், பன்றிகளை பிடிக்கப் பயன்படுத்தப்படும் வலையை வீசித் தெருநாயை பிடித்தனர். பின்னர், கட்டையால் தெருநாயை அடித்துக் கொன்றனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த வீடியோ அடிப்படையில் விலங்கு நல ஆர்வலர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















