காவிரி – வைகை- குண்டாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்திச் சென்னையில் அகில இந்திய விவாசயிகள் சங்கத்தினர் சார்பில் பேரணி நடைபெற்றது.
சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்ற இந்தப் பேரணியில் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அப்போது காவிரி – வைகை- குண்டாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், விவசாய விளைபொருட்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்பன கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
















