நீண்ட காத்திருப்புக்குப் பின், பாகிஸ்தானின் முதல் பாதுகாப்புப் படை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அசிம் முனீர் மீண்டும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத விஷத்தைத் தூவியுள்ளார். ராணுவச் சீருடை அணிந்த ஜிகாதியான அசிம் முனீர், நாட்டையே ஜிகாதி பாகிஸ்தானுக்கும் முயற்சியில் ஈடுபுட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 27வது சட்டத்துக்கு அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் முதல் பாதுகாப்புப் படை தலைவராக அசிம் முனீர் பொறுப்பேற்றுள்ளார். இதன்மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அசிம் முனீர் இந்தப் பதவியில் இருப்பார். அதே நேரத்தில், ராணுவத்தின் தலைமை தளபதியாகவும் தொடர்வார். பாகிஸ்தான் ராணுவத் தலைமையகத்தில், கடற்படைத் தளபதி அட்மிரல் நவீத் அஷ்ரஃப், விமானப் படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஜாகீர் அகமது பாபர் சித்து; மற்றும் ஆயுதப்படைகளின் மூன்று பிரிவுகளின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட சிறப்பு விழாவில், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை அசிம் முனீர் ஏற்றுக் கொண்டார்.
நாட்டின் பாதுகாப்புப் படைத் தலைவராக அசின் முனீர், தனது முதல் உரையில், மீண்டும் இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் எதிரான ஆத்திரமூட்டும் வார்த்தைகளைக் கொட்டி இருக்கிறார். இந்தியா தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு ஒரு மாயையில் இருப்பதாகவும், இந்தியா மீதான அடுத்த தாக்குதல் கடுமையானதாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
மேலும் இந்தியாவுக்கு ஆதரவாகப் பாகிஸ்தான் தலிபான்களுக்கு ஆப்கானிஸ்தான் உதவுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இது ஒன்றும் அசிம் முனீருக்கு புதிதல்ல. 2022 ஆம் ஆண்டு இராணுவத் தலைமை தளபதியாகப் பொறுப்பேற்றதும், அந்நாட்டு இராணுவ வீரர்களை மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதை விட இஸ்லாத்துக்குப் பாதுகாப்பு அளிக்கும் ஜிகாதிகளாக மாற்றும் வேலையில் இறங்கினார்.
கடந்த பிப்ரவரியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகரான முசாபராபாத்தில் காஷ்மீருக்காக ஏற்கனவே மூன்று போர்கள் நடத்தப்பட்டுள்ளன என்றும், தேவைப்பட்டால், மேலும் 10 போர்களை நடத்த தயாராக இருப்பதாகவும் சவால் விடுத்தார். பாகிஸ்தான் உருவானதற்கு காரணமே இருநாடு கோட்பாடு என்றும், இஸ்லாமியர், இந்துக்கள் வெவ்வேறு கலச்சாரத்தைக் கொண்டவர்கள் இணைந்து வாழ முடியாது என்றும், இந்தக் கொள்கையை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்றும் வெளிநாடுவாழ் பாகிஸ்தானியர்கள் மாநாட்டில் பேசினார்.
மேலும் காஷ்மீர் பாகிஸ்தானின் கழுத்து நரம்பு என்றும் கூறியிருந்தார். இப்படி அசிம் முனீர் பேசிய நான்காவது நாளில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில், அப்பாவி இந்துக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். பதிலுக்கு இந்தியா நடத்திய ஆப்ரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் தளங்கள் மற்றும் பயிற்சி முகாம்கள் அழிக்கப் பட்டன. 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் இராணுவ நடவடிக்கையில் இறங்க, அந்நாட்டு முக்கிய விமானத்தளங்கள் அனைத்தும் தாக்கி அழிக்கப்பட்டன. போரை நிறுத்துமாறு பாகிஸ்தான் கெஞ்சியதைத் தொடர்ந்து ஆப்ரேஷன் சிந்தூரை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. தோல்விக்குப் பிறகு தன்னை பீல்டு மார்ஷலாக உயர்த்திக் கொண்ட இராணுவத் தலைமை தளபதி அசிம் முனீர், அமெரிக்க மண்ணில் இருந்து, சிந்து நதி என்ன இந்தியாவின் குடும்ப சொத்தா? என்று கேள்வியெழுப்பியதுடன், சிந்துநதியில் இந்தியா கட்டும் அணையை ஏவுகணைகளால் தகர்ப்போம் என்று கூறியிருந்தார்.
மேலும், அணு ஆயுத நாடான பாகிஸ்தான் தோற்பதாக இருந்தால், அணுகுண்டால் உலகின் பாதியை அழித்து விடுவோம் என்றும் மிரட்டல் விடுத்தார். தொடர்ந்து கடந்த அக்டோபரில், கைபர் பக்துன்வாவின் பாகிஸ்தான் ராணுவ அகாடமியில் நடந்த ராணுவ வீரர்களின் பட்டமளிப்பு விழாவில் பேசிய போதும், அணுசக்தி நாடான பாகிஸ்தான் இந்தியாவை மொத்தமாக அழித்து விடும் திறன் கொண்டது என்று அசீம் முனீர் குறிப்பிட்டிருந்தார்.
சொந்த தோல்விகளை மறைக்க இந்தியாவுக்கு எதிராக பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ள அசிம் முனீர், உள்நாட்டுப் பிரச்சனைகளை விட்டு விட்டு, இந்தியாவுடனான போருக்குப் பாகிஸ்தானை கொண்டுவந்துள்ளார். சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத அசிம் முனீரால் தான் அந்த திட்டத்தை சீனா நிறுத்தி வைத்துள்ளது. மேலும், அசிம் முனீர் பதவி காலத்தில் தான் ராணுவத் தோல்வி அதிகமாகியுள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் 784 பயங்கரவாத தாக்குதல்களில் 579 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 400 இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளார். இதைச் சமாளிக்கவே, அசிம் முனீர் காஷ்மீர், இஸ்லாம் என இந்தியா மீது ஆத்திரமூட்டும் வகையில் பேசிவருகிறார் என கூறப்படுகிறது. சொல்லப்போனால் பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகையில் 60 சதவீதத்துக்கும் மேல் ஜிகாதிகளாக இருக்கும் நிலையில் ராணுவ வீரர்களையும் ஜிகாதிகளாக்கி, நாட்டையே ஜிகாதி பாகிஸ்தானுக்கும் முயற்சியில் அசிம் முனீர் உள்ளார்.
















