வந்தே மாதரம் என முழங்கியவர்களை இந்திரா சிறையில் அடைத்தார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வந்தே மாதரம் பாடல் குறித்த விவாதத்திற்கு அமித் ஷா தலைமை தாங்கினார். அப்போது உரையாற்றிய அவர், மேற்கு வங்க தேர்தலோடு தொடர்புபடுத்தி வந்தே மாதரம் பாடலின் மகிமையை எதிர்க்கட்சிகள் குறைத்து மதிப்பிடுவதாகவும் விமர்சனம் செய்துள்ளார்.
















