பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை பார்க்க அனுமதி கோரி அவரது சகோதரிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊழல் முறைகேடு வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு அடியாலா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக அவரை காண அவரது ஆதரவாளர்களுக்கும், குடும்பத்தினக்கும் சிறை நிர்வாகம் அனுமதி மறுத்து வருகிறது.
இதன் காரணமாக கடந்த வாரம் இம்ரான் கானின் சகோதரின் சிறைச்சாலை முன்பு போராட்டம் நடத்தியது முக்கிய பேசுபொருளானது. இந்நிலையில், அவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
















