திமுகவினருக்கு நல்ல புத்தி தரவேண்டி சென்னை பம்மல் பகுதியில் உள்ள சுப்பரமணிய சுவாமி கோயிலில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் சிதறு தேங்காய் உடைத்து பிரார்த்தனை செய்தனர்.
விஷ்வ இந்து பரிஷத்தின் தென்தமிழகம் சார்பில் மாதம் இருமுறை முருகன் கோயிலில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது வழக்கம், அதன்படி, சென்னை பம்மல் பகுதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் கந்த சஷ்டி பாராயணம் செய்தனர். திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற விடா திமுக அரசைக் கண்டித்தும், திமுகவினருக்கு நல்ல புத்தி தரவேண்டி இறைவனிடம் முறையிட்டும் சிதறு தேங்காய் உடைத்தும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வில் சென்னை மாநகர செயலாளர் ராமச்சந்திரன், வடபழனி பகுதி பொறுப்பாளர் ஹரிஷ், வட தமிழக மாநில அமைப்பு செயலாளர் ராமன், தென் தமிழக அமைப்புச் செயலாளர் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.
















