தருமபுரி அருகே ரயில்வே துறையைக் கண்டித்து பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ரயில் நிலையத்தை ஒட்டி நெல்லிநகர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் ரயில்வே நிலையத்தை ஒட்டிய வழி பாதையை கடந்த 100 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தச் சூழலில், விரிவாக்கப் பணிகளுக்காக கழிப்பிட கட்டிடம் கட்டும் பணி நடைபெறுகிறது. இதனை கண்டித்து குவிந்த மக்கள், வேலை செய்யும் பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
















