திருப்பூர் மாவட்டம், வேலம்பாளையம் பகுதியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகங்களுக்கு முறைகேடாக மின் இணைப்பை பயன்படுத்தும் எம்எல்ஏ மற்றும் மேயர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வேலம்பாளையம் ராஜா வீதியில் உள்ள கட்டடத்தில் திமுக தெற்கு மாவட்ட அலுவலகம் செயல்பட்டு வருவதாகவும், திமுக எம்எல்ஏ பெயரில் உள்ள இந்தக் கட்டடத்திற்கு முறைகேடாக மின் இணைப்பை பயன்படுத்தி வருவதாகவும், நுகர்வோர் நல முன்னேற்றச் சங்க தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.
இதேபோல, திமுக மேயர் அலுவலகத்திற்கு முறைகேடாக மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் சமூக ஆர்வலர் குற்றம்சாட்டினார்.
















