கோவை அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள், ஊருக்குள் இருந்த குட்டையில் குளித்து மகிழ்ந்தன.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் வனப்பகுதியில் இருந்து நேற்றிரவு யானைகள் சில, கீரநத்தம் கிராமத்திற்குள் நுழைந்தன.
இந்தநிலையில் ஊருக்குள் இருந்த குட்டையில் யானைகள் ஆனந்த குளியல் போட்டன. இக்காட்சியை அவ்வழியாக வந்த பொதுமக்கள் சிலர், செல்போனில் வீடியோ எடுத்துச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர்.
















