சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் இரவுநேர பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களின் வாகனம் மீது கார் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆழ்வார்பேட்டை பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் குப்பைகளை சேகரித்து வாகனத்தில் எடுத்துச் சென்றனர்.
அப்போது, எதிர்திசையில் அதிவேகமாக வந்த கார் தூய்மை பணியாளர்களின் வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், வாகனத்தில் இருந்த 2 பெண்களின் தலையில் ஏற்பட்ட நிலையில், உடனடியாக அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
















