சபரிமலையில் மண்டல பூஜை தரிசனத்திற்கு இன்று மாலை 5 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு தொடங்கும் எனத் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த மாதம் 16ம் தேதி நடை திறக்கப்பட்டது. நடப்பு ஆண்டின் மண்டல பூஜை வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி வரும் 26 மற்றும் 27-ம் தேதிகளில் சுவாமி தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 5 மணிக்குத் தொடங்குகிறது.
வரும் 26ம் தேதி 30 ஆயிரம் பேருக்கும், 27-ம் தேதி 35 ஆயிரம் பேருக்கும் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பாட் புக்கிங் முறையில் தினசரி 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனவும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதனிடையே வரும் 26ம் தேதி சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படும் எனக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
















