தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் உள்ள தட்சணகாசி கால பைரவர் கோயிலில் ஜெயந்தி விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
மன்னர் அதியமானால் கட்டப்பட்ட தட்சணகாசி கால பைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி நாளில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வரும் நிலையில், ஜெயந்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டு ஜெயந்தி விழாவுக்கான கொடி ஏற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து, தட்சணகாசி கால பைரவர் சிறப்பு அலங்காரத்தில்எழுந்தருளிப் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
















