தஞ்சையில் பயணிகளை ஏற்றிச் செல்வதில் அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 100க்கு மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்தநிலையில் இன்று காலைப் பயணிகளை ஏற்றிச் செல்வதில், அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த போலீசார், அரசுப் பேருந்து வரவேண்டிய நேரத்தில், முன்கூட்டியே வந்து பயணிகளை ஏற்றிய தனியார் பேருந்தை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
















