இந்த ஆண்டில் நவம்பர் மாத குளிர்காலத்தின் வெப்பநிலை, உலகம் வெப்பமயமாதல் குறித்த எச்சரிக்கையை மனிதகுலத்திற்கு மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை சேவை அமைப்பான கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்றச் சேவை, கடந்த நவம்பரில் சராசரி மேற்பரப்பு வெப்பநிலை 14 புள்ளி பூஜ்ஜியம் இரண்டு டிகிரி செல்சியசாக இருந்தது எனத் தெரிவித்துள்ளது.
இது 1990 முதல் 2020 வரையிலான நவம்பர் மாதங்களின் சராசரியை விடப் பூஜ்ஜியம் புள்ளி 65 டிகிரி செல்சியஸ் அதிகமாக உள்ளது.
மேலும் இந்த வெப்பநிலையை, இதுவரை நவம்பரில் பதிவான அதிக வெப்பம் கொண்ட மாதமாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த ஆண்டு முதலிடத்திலும், அதற்கு முந்தைய ஆண்டு இரண்டாமிடத்திலும், நடப்பு ஆண்டு மூன்றாவது இடத்திலும் உள்ளது.
குறிப்பாக வட கனடா, ஆர்டிக் பெருங்கடல் மற்றும் கிழக்கு ஐரோப்பா முழுவதும் சராசரியைவிட வெப்பநிலை மிக அதிகமாகப் பதிவாகியுள்ளது.
இந்த உயர் வெப்பநிலைப் புள்ளிவிவரங்கள், காலநிலை மாற்றத்தின் வேகத்தைக் குறிப்பதாகவும், புவி வெப்பமடைவதைத் தணிக்க greenhouse gas உமிழ்வுகளை குறைக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
















