தொடர் போராட்டம் காரணமாகப் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை வேறு சிறைக்கு மாற்றம் செய்யப் பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் தண்டனை விதிக்கப்பட்ட இம்ரான் கான் அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் இம்ரான்கான் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகத் தகவல்கள் பரவின. இதனால் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இம்ரான் கான் உயிருடன் இருப்பதை சிறைக்கு சென்று பார்வையிட்டு அவரது சகோதரி உறுதி செய்தார்.
இந்நிலையில் தொடர் போராட்டம் காரணமாக, இம்ரான்கானை அடியாலா சிறையில் இருந்து, பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டோக் மாவட்ட சிறைக்கு மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
















