இந்தியாவின் தொழில்நுட்ப திறன்கள் எதிர்காலத்திற்குத் தயாராக உள்ளன என்று மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் கப்பலை பயன்பாட்டுக்குத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கப்பல் பயன்பாட்டைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசிய அவர், ஹைட்ரஜன் எரிபொருளால் இயங்கும் கப்பல்களை இயக்கும் சீனா, நார்வே, நெதர்லாந்து மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா தற்போது இணைந்துள்ளது எனக் கூறினார்.
















