வர்த்தகத்திற்கு வெளிப்படைத்தன்மையும், நம்பிக்கையும் மிகவும் அவசியம் என்று வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் வர்த்தக நிறுவனத்தின் புதிய கட்டடத்தை மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் திறந்து வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பியூஷ் கோயல், சுங்க வர்த்தக வசதி மையத்தைப் போல, இந்தப் புதிய கட்டடமும் இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது எனக் கூறினார்.
இந்த நவீன உள்கட்டமைப்பு வர்த்தகம் செய்யும் முறையை மேம்படுத்தி, நாட்டின் சுயசார்பு திட்டத்திற்கு வலு சேர்க்கும் எனவும் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
















