உள்நாட்டு ஆராய்ச்சி மூலம் சுமார் 2 லட்சத்து 64 ஆயிரத்து 156 கோடி ரூபாயை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சேமித்து இருப்பதாக நாடாளுமன்ற நிலைக்குழு பாராட்டியுள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் பணி தொடர்பாக நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதுபற்றி விளக்கிய நாடாளுமன்ற நிலைக்குழு, அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்கள் மற்றும் ஏவுகணைகளை உருவாக்குவதில் DRDO குறிப்பிடத்தக்க இடத்தை அடைந்துள்ளதாக தெரிவித்தது.
உள்நாட்டு ஆராய்ச்சி மூலம் சுமார் 2 லட்சத்து 64 ஆயிரத்து 156 கோடி ரூபாயை DRDO சேமித்து இருப்பதாக பாராட்டிய குழுவினர், உள்நாட்டு பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திறன்களை வலுப்படுத்த, தொழில்நுட்ப துறைகளில் DRDO முழு வீச்சில் பணியாற்றும் எனவும் புகழாரம் சூட்டினர்.
















