டெல்லியை பூர்வீகமாக கொண்ட இரண்டு பள்ளி மாணவிகள், பாரதியாரின் பாடலை பாடியதை ஆளுநர் ஆர்.என்.ரவி வியந்து பாராட்டினார்.
ஆளுநர் மாளிகையான மக்கள் பவனில், பாரதியார் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் டெல்லி தமிழ்க் கல்வி கழகத்தைச் சேர்ந்த மாணவி நவியா கான், பாரதியாரின் பாடல்களை பாடி, அனைவரது பாராட்டையும் பெற்றார்.
இதேபோன்று டெல்லி தமிழ்க் கல்வி கழகத்தில் இருந்து வந்த பாமி என்ற மாணவி, பாரதியின் பாடலை பாடியும், பாரதியின் புகழை தமிழில் பட்டியலிட்டும் பேசினார்.
டெல்லியைச் சேர்ந்த மாணவிகள் இருவரும் பாரதியாரை பற்றி தமிழில் உரையாற்றியது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. டெல்லியில் இருந்தாலும் தமிழ் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக தமிழை கற்றுக்கொண்டதாகவும், ஆசிரியர்கள் தங்களுக்கு பேரூதவியாக இருந்ததாகவும் மாணவிகள் தெரிவித்தனர்.
















