அரசியல் கட்சிகள், நிர்வாகிகள் முன்னிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் சரி பார்க்கும் பணி நடைபெறும் என கோவை ஆட்சியர் பவன் குமார் தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு தாசில்தார் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை கோவை ஆட்சியர் பவன் குமார் பார்வையிட்டு சரி பார்க்கும் பணியை தொடங்கிவைத்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மொத்தம் 19 ஆயிரத்து 521 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வி.வி.பேட், மற்றும் கண்ட்ரோல் யூனிட் இயந்திரங்கள் சரி பார்க்கும் பணி நடைபெற்று வருவதாகவும், இப்பணி ஒரு மாதம் வரை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
















