சென்னையில் குடும்ப பிரச்னை காரணமாகச் சீரியல் நடிகை ராஜேஸ்வரி தற்கொலை செய்துகொண்டார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி தொடர்களில் நடித்து வந்தவர் ராஜேஸ்வரி. இவர், சென்னை பிராட்வேயில் உள்ள வீட்டில் கணவருடன் வசித்து வந்துள்ளார்.
இருவருக்கும் இடையே தகராறு ஏற்படவே, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சைதாப்பேட்டையில் உள்ள தாய் வீட்டிற்கு ராஜேஸ்வரி சென்றுள்ளார்.
குடும்ப பிரச்னை காரணமாக மன உளைச்சலில் இருந்த அவர், தாயின் பிபி மாத்திரையை அதிகளவு உண்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ராஜேஸ்வரி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
















