சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்ததில் தந்தை, மகன் உயிரிழந்தனர்.
நெய்க்கார தோட்டம் பகுதியை சேர்ந்த முத்து, அவரது மகன் கிருஷ்ணமூர்த்தி, ஆகியோர் அங்கு உள்ள விவசாய தோட்டத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்ததில் முத்து மயங்கி விழுந்து உயிரிழந்தார். தந்தையை காப்பாற்ற முயன்ற மகன் கிருஷ்ணமூர்த்தியும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
















