கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்புவாசிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பாழ்வாய்க்கால் பகுதியில் நெடுஞ்சாலை ஓரமாக 19-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில், சேத்தியாத்தோப்பு – சிதம்பரம் சாலையில் வீடுகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த குடியிருப்புவாசிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
















