திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே இளைஞரை கொன்று விட்டுத் தப்பிய நால்வரை போலீசார் கைது செய்தனர்.
வெள்ளவேடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஹரிகிருஷ்ணன் என்பவர் விபத்தில் சிக்கியதாகக் கூறி சிலர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் ஹரிகிருஷ்ணன் உயிரிழந்தது தெரியவந்ததும் அவர்கள் தப்பி ஓடியுள்ளனர். விசாரணையில் ஹரிகிருஷ்ணனை அடித்துக் கொன்றுவிட்டு மருத்துவமனையில் அனுமதித்தது தெரியவந்தது.
இதனையடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நால்வரை கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.
















