கும்பகோணத்தில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எனக்கூறி அரசு அதிகாரிகளை ஏமாற்றி வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காவேரி அரசலாறு திட்ட இல்லத்தில் அமைச்சர்கள், அரசுத் துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பிரமுகர்கள் தங்குவது வழக்கம்.
இந்நிலையில், சென்னை தியாகராய நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் தாம் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எனக்கூறி திட்ட இல்லத்தில் அடிக்கடி தங்கி வந்துள்ளார்.
அவரது நடவடிக்கைமீது சந்தேகமடைந்த பணியாளர்கள் கும்பகோணம் சார் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.
சார் ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில் ராமகிருஷ்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், அவர் போலி ஐஏஎஸ் அதிகாரி எனத் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, திட்ட இல்லத்தின் மேலாளர் அளித்த புகாரின்பேரில் ராமகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.
















