திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அரசு மதுபான கடையை மூட வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். புதுகோவிந்தாபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை, குடியிருப்புப் பகுதிகள் நிறைந்த இடத்தில் இருப்பதாகவும் சிலர் மது அருந்திவிட்டு அவ்வழியாக வருவோரிடம் தகராறு செய்வதாகவும் பொதுமக்கள் குற்றஞசாட்டி உள்ளனர்.
இது தொடர்பாகப் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை இல்லையென அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
















