ரஷ்யா – உக்ரைன் போர் 3-ம் உலக போருக்கு வித்திட்டுவிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்து உள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் மத்தியஸ்த பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடனும் டிரம்ப் பேசி வருகிறார்.
இருந்தபோதும் இதுவரை சமூக தீர்வு காணப்படாமல் உள்ளது. இந்நிலையில் ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர், 3-ம் உலக போரில் கொண்டு சென்று விட்டுவிடும் என டிரம்ப் எச்சரித்து உள்ளார்.
















