ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் பாதுகாப்பு இல்லாத உண்டியலை வைத்து அதிகாரிகள் முறைகேடு செய்வதாகப் புகார் எழுந்துள்ளது.
சோளிங்கரில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோயிலில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள இணை ஆணையரின் உத்தரவின் பேரில், பக்தர்கள் செல்லும் வரிசையில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தின் நடைமுறைக்குப் புறம்பாக இந்த உண்டியல் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதுவும் பாதுகாப்பற்ற முறையில் உள்ளதாகவும் பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனிடையே, சிறப்பு தரிசன கட்டணத்தை ரத்து செய்து, அதனை உண்டியலில் செலுத்த திருப்பதி உண்டியலை போன்று வைத்துள்ளதாக அதிகாரி விளக்கமளித்துள்ளார்.
















