திருப்பரங்குன்றம் விவகாரத்தில், நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக இந்து முன்னணி அமைப்பு சார்பில் ஆன்லைன் மூலம், பொதுமக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டு வருகிறது.
கார்த்திகை தீபத்தன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி உத்தரவிட்டார்.
ஆனால் இந்த உத்தரவைத் தமிழக அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் செயல்படுத்தவில்லை.
இந்தநிலையில் நீதிமன்ற தீர்ப்பை ஆதரிக்கிறீர்களா. இல்லையா என்பது குறித்து இந்து முன்னணி அமைப்பு சார்பில் கருத்துக் கணிப்பு நடத்தப்படுகிறது.
இதுவரை சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது கருத்துகளை பதிவு செய்துள்ளனர். இந்து முன்னணி டாட் ஓ.ஆர்.ஜி என்ற இணையதள முகவரி வாயிலாகப் பொதுமக்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்யலாம்.
















