தாய்லாந்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள கோவா கேளிக்கை விடுதி உரிமையாளர்களான லூத்ரா சகோதரர்களின் முன்ஜாமின் மனுக்கள் டெல்லி நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
கோவாவின் ஆர்போரா பகுதியில் அமைந்திருந்த “பர்ச் பை ரோமியோ லேன்” என்ற இரவு கேளிக்கை விடுதியில், கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 25 பேர் வரை உயிரிழந்தனர்.
இந்த விபத்திற்கு பின் அந்த விடுதியின் உரிமையாளர்களான கவுரவ் மற்றும் சௌரப் லூத்ரா ஆகியோர் தாய்லாந்துக்கு தப்பிச் சென்றனர். போலீசார் நடத்திய விசாரணையில், கேளிக்கை விடுதி உரிய அனுமதியின்றி செயல்பட்டது தெரியவரவே, விடுதி இடித்து அகற்றப்பட்டது.
இதற்கிடையே தாய்லாந்து நாட்டு போலீசார் உதவியுடன் லூத்ரா சகோதரர்கள் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கபட்டுள்ளனர். கோவா மக்கள் தங்களை அடித்துக் காயப்படுத்த வாய்ப்புள்ளதாகக் கூறி, அவர்கள் இருவரும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டு மிகக் கடுமையானது என்பதாலும், அவர்கள் சில தகவல்களை மறைத்துள்ளதாலும் முன்ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்தது.
அதே நேரத்தில், கோவா அரசும் சட்டவிரோத கேளிக்கை விடுதிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதுடன், சுற்றுலா பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்க தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது.
















