ராமநாதபுரம் மாவட்டம் பாரூரில் “ஆதி சிவன் கம்ப காமாட்சி அம்மன்” கோயிலில் சுவாமி சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த தங்கச்சங்கிலியை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
மேலும் கோயிலின் உண்டியலை உடைத்த கொள்ளையர்கள், அதிலிருந்த பணம், நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
போலீசாரிடம் சிக்காமல் இருக்க அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை அவர்கள் உடைத்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து போலீசார், தடயவியல் நிபுணர்களுடன் வந்து, தடயங்களை சேகரித்தனர்.
















