அரிசி இறக்குமதிக்கான வரியை அமெரிக்கா எத்தனை மடங்கு உயர்த்தினாலும் நமக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது என நெல், அரிசி வணிகர் சங்கங்களின் மாநில இணை செயலாளர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு வரி விதிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பாகப் பேட்டியளித்த நெல் அரிசி வணிகர் சங்கங்களின் மாநில இணை செயலாளர் வெங்கட்ராமன், அரிசிக்கு வரி உயர்த்தப்பட்டாலும் ஏற்றுமதியாளர், மற்றும் விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து 5 சதவீத அரிசி மட்டுமே அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாவதாகவும், அதனால் நமக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
















