சென்னை திருவொற்றியூரில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.
சென்னை திருச்சிநாகுப்பம் பகுதியை சேர்ந்த சுனில் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 5 பேரை கைது செய்த போலீசார், மேலும் சிலரை தேடி வந்தனர்.
இந்தநிலையில் முக்கிய குற்றவாளிகளான வினோத், வடிவேலு, விக்கி ஆகியோர் திருவொற்றியூர் மீன்பிடி துறைமுகத்தில் பதுங்கியிருப்பதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்குச் சென்ற காவல்துறையினர் மீது, அவர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாகக் கூறப்படுகிறது. மேலும் உதவி ஆய்வாளர் நவீன் மீது ரவுடி விக்கி, அரிவாளால் தாக்கி உள்ளார்.
இதையடுத்து காலில் துப்பாக்கியால் சுட்டு ரவுடி விக்கியை போலீசார் பிடித்தனர். இதனிடையே பாறைகளின் நடுவே பதுங்கியிருந்த வடிவேலு, வினோத் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
















