திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசுக் கெடுபிடி காட்டும்போது மக்கள் அமைதியாக இருந்ததாகவும், தற்போது மௌன புரட்சி நடைபெற்று வருவதாகவும் பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் தேசிய சிந்தனைப்பேரவையின் சார்பில் நடந்த பாரதியார் பிறந்தநாள் கருத்தரங்கில் ராம சீனிவாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக பற்ற வைத்துள்ள நெருப்பு அறிவாலயத்தில் புகையத்தான் போகிறது எனத் தெரிவித்தார்.
















