சென்னை பாண்டிபஜாரில் ஆன்லைன் டிரேடிங்கில் லாபம் ஈட்டித் தருவதாகக் கூறி 40 லட்சம் ரூபாயை மோசடி செய்த மூவரை போலீசார் கைது செய்தனர்.
நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவர், ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.
இவரிடம் அறிமுகமான லூரூ என்சன்ராஜ் என்பவர், 40 லட்சம் ரூபாய் கொடுத்தால் ஆன்லைன் டிரேடிங் மூலம் 50 லட்சம் ரூபாயாக திருப்பித் தருவதாகக் கூறியுள்ளார்.
இதனை நம்பிய ஆனந்த், கடந்த 9-ம் தேதி 40 லட்சம் ரூபாயை வங்கிக்கணக்கில் செலுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து லூரூ என்சன்ராஜ் உள்ளிட்டோர் தலைமறைவாகினர்.
இந்நிலையில் தி.நகரில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த லூரூ என்சன்ராஜ் உள்ளிட்ட மூவரை பிடித்த ஆனந்த், அவர்களை பாண்டிபஜார் காவலநிலையத்தில் ஒப்படைத்தார்.
















