கோவை மாவட்டம் அன்னூர் அருகே தைலமர தோப்பில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் மக்கள் அச்சமடைந்தனர்.
காக்கா பாளையம் பகுதியில் சுற்றித்திரிந்த 3 காட்டு யானைகள், தைலமர தோப்புக்குள் நுழைந்தன.
இதைக் கண்டு அச்சமடைந்த மக்கள், வனத்துறைக்கு தகவல் அளித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள், குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் செல்லாத வண்ணம் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
















