பனாமாவில் சிறிய ரக விமானம் ஒன்று கடற்கரை சாலையில் அவசரமாகத் தரையிறங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அமடோர் கடற்கரை சாலையில் பீச் கிராஃப்ட் போனான்ஸா என்ற சிறிய ரக விமானம் ஒன்று திடீரென அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் விமானத்தின் முன் பகுதி சேதமடைந்தது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடற்கரைப் பாதையில் விமானம் அவசரமாகத் தரையிறங்கியதால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
















