அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தெருநாய் கடித்து குதறியதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மருதூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாகத் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.
அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய், சாலையில் நடந்து சென்றவர்களை விரட்டி விரட்டிக் கடித்ததில் மூதாட்டிகள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தெருநாய்கள் தொல்லை குறித்து பலமுறை புகாரளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
















