சென்னை திருவொற்றியூரில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகளில், வருமானவரி சோதனை நடைபெற்றது.
திருவொற்றியூர் சந்ததி தெருவில் ஜேஆர் ஏஜென்சி, சூர்யா பர்னிச்சர் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இக்கடைகளில் வருமானவரி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரை அடுத்து சோதனை நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
















