சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 2,560 ரூபாய் உயர்ந்ததால் நகை பிரியர்கள் கலக்கம் அடைந்தனர்.
சென்னையில் காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 600 ரூபாய் உயர்ந்து 98 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு 200 ரூபாய் உயர்ந்து 12 ஆயிரத்து 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், மாலையில் தங்கம் விலை சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து, 98 ஆயிரத்து 960க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு 120 ரூபாய் உயர்ந்து 12 ஆயிரத்து 370 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து 216 ரூபாய்க்கும் கிலோவிற்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து இரண்டு லட்சத்து 16 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
















