நெத்திமேடு கரியபெருமாள் கோயில் மண்டபத்தை திமுகவினர் பகுதி அலுவலகமாக மாற்றி அராஜகத்தில் ஈடுபடுவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சேலம் மாவட்டம், நெத்திமேடு மலையின் மீது கரியபெருமாள் கோயிலுக்குச் சொந்தமான அர்த்தமண்டபம், மலையடிவாரத்தில் விநாயகர் கோயில் அருகாமையில் உள்ளது.
இந்த மண்டபத்தை தற்போது திமுக பகுதி செயலாளர் கார்த்தி தனது அலுவலகமாக மாற்றி அங்குக் கூட்டங்களை நடத்தி வருவதாகவும், எஸ்ஐஆர் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கோயில் சார்பில் திமுகவினருக்கு தேநீர் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்படுவதாகவும் கூறியுள்ளனர்.
மேலும், கோயிலில் திமுகவினர் கூட்டம் நடத்த அனுமதி வழங்கிய அறநிலைத்துறை அதிகாரிகள்மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















