அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் விழாவில் பங்கேற்காத, வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சோடா, பொது நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
ஜனநாயகத்தை மீட்பதற்காகப் போராடியதற்காக, வெனிசுலாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சோடாவுக்கு இந்தாண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
நார்வேயின் ஓஸ்லோவில் நோபல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மச்சோடாவுக்கு பதில்அவருடைய மகள் விருதைப் பெற்றுக் கொண்டார்.
நோபல் பரிசு வழங்கப்பட்ட சில மணி நேரங்களில், ஓஸ்லோ நகருக்கு வந்த மச்சோடா ஆதரவாளர்களை சந்தித்தார். இதன்மூலம் 11 மாதங்களுக்குப் பின் அவர் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
















