கள்ளக்குறிச்சி மாவட்டம், வடபொன்பரப்பியில் அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
கள்ளக்குறிச்சியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது.
வடபொன்பரப்பி ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து வட பொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
















