இந்திய விமானப் படையின் ரபேல் போர் விமானி ஷிவாங்கி சிங், பயிற்சி விமானிகளைத் தயார்படுத்துவதற்காக விமானப்படை பயிற்சி நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டு உள்ளார்.
ரபேல் போர் விமானத்தை இயக்கிய முதல் பெண் விமானி என்ற பெருமை பெற்றவர் ஷிவாங்கி சிங். ரபேல் விமானங்களை இயக்கி வரும் இவர், முன்னதாக மிக் 21 விமானங்களையும் இயக்கி உள்ளார்.
இந்திய விமானப்படையில் பல சவாலான பணிகளையும் ஷிவாங்கி சிங் மேற் கொண்டுள்ளார்.
இந்நிலையில் ஷிவாங்கி சிங் தற்போது பயிற்சி விமானிகளைத் தயார்படுத்துவதற்காக இந்திய விமானப்படை பயிற்சி நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டு உள்ளார்.
















