இந்தியா வந்துள்ள கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்தியா டூர் 2025 என்ற திட்டத்தின்படி அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி இந்தியா வந்துள்ளார். விமானம் மூலம் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா வந்த அவருக்கு விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் உற்சாகமாக குரல் எழுப்பி வரவேற்பு அளித்தனர்.
மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள மெஸ்ஸி, உலக கோப்பையை தாங்கிய 70 அடி உயரமுள்ள தனது உருவ சிலையை காணொலி வாயிலாக இன்று திறந்து வைக்கிறார். தொடர்ந்து ஹைதராபாத்தில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்கும் காட்சி போட்டியில் விளையாடுகிறார்.
இதையடுத்து நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சி மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்கள், பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்கும் பேஷன் ஷோவில் பங்கேற்க உள்ளார். மூன்றாவது நாள் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்திக்க உள்ளார்.
















