திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேகாலை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அமைப்பின் மாநிலச் செயலாளர் பால மணிமாறன், திருப்பரங்குன்றம் தீபமேற்றும் விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டுத் தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், நீதிமன்றத் தீர்ப்பு தெளிவாக உள்ளது என்பதை குறிப்பிட்ட அவர், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தேவையின்றி பிரச்னைகள் எழுப்பப்படுவதாகக் குற்றம்சாட்டினார்.
















